சென்னை:

குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என மிரட்டி வந்த மஹா புயல் வலுவிலந்து விட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக புயல் தாக்குதலில் இருந்து குஜராத் மாநிலம் தப்பி உள்ளது.

அரபிக்கடலில் உருவான ‘மகா’ புயல், டையு யூனியன் பிரதேசம் அருகே குஜராத் கடலோர பகுதியில் இன்று காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்றுகுஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மகா’ புயல், மாலையில், கிழக்கு திசையில் நகர்ந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. அது மேலும் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலைக்குள் தீவிர காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று ஆமதாபாத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது. இன்று மாலை மேலும் வலுவிழந்து, காற்றழுத்த பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

எனவே, குஜராத், டையு கடலோர பகுதிகளை புயல் தாக்காது. இருப்பினும், குஜராத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும்  வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், குஜராத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.