குஜராத் முதல்வர், ஆளுநருக்காக 191 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெட் விமானம் !

Must read

குஜராத் ஆளுநர், முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பயணிக்க 191 கோடி ரூபாய் மதிப்பில் ஜெட் விமானத்தை அந்த மாநில அரசு வாங்கியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் பயணிக்க பீச்கிராப்ட் சூப்பர் கிங் விமானம் பயன்படுத்தப்பட்டது. அந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 9 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதற்கு பதிலாக, புதிய ஜெட் விமானத்தை வாங்கும் பணி 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த பணிகள் இன்னும் 2 வாரங்களில் முடிந்து, குஜராத் அரசிடம் ஜெட் விமானம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

7,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட ஜெட் விமானம், இரட்டை என்ஜின்களை கொண்டது. அதன் பெயர் பாம்பார்டியர் சேலன்ஜர் 650ஆகும். 12 பேர் அதில் பயணிக்க முடியும். பழைய விமானத்துடன் ஒப்பிடும்போது புதிய ஜெட் விமானம், அதிக உயரமும், அதிக தூரமும் பறக்கும் திறன் கொண்டது.

More articles

Latest article