ண்டிகர்

ரியானாவை சேர்ந்த காமன்வெல்த் விளையாட்டு வீராங்கனை மானு பேகரை அவர் சொந்த ஊரிலேயே அவமானப் படுத்தப் பட்டுள்ளார்.

காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது.   இந்த போட்டிகளில் பதக்கங்கள் தர வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்துக்கு வந்தது.  துப்பாக்கி சுடும் போட்டியில் அரியானாவை சேர்ந்த மானு பேகர் தங்கப் பதக்கம் வென்றார்.

மானுவின் சொந்த மாநிலமான அரியானாவில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.   அந்த விழாவில் முதலில் மாலை அணிவித்து ஒரு நாற்காலியில் மானு அமர வைக்கப்பட்டுள்ளார்.   ஆனால் விழாவின் முக்கிய பிரமுகர்கள் வந்ததும் அவரை அங்கிருந்து எழுப்பி தரையில் உட்கார வைத்துள்ளனர்.   பிரமுகர்களை நாற்காலிகளில் அமர வைத்துள்ளனர்.

இவ்வாற் அவர் முதலில் நாற்காலியிலும் பின்பு தரையிலும் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.