ஜெய்ப்பூர்

நேற்று நடந்த ஐபிஎல் 2018 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது

நேற்று ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் நடைபெற்றது.    இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.   டாஸ் வெற்ன்ர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரகானே 36 ரன்களில் அவுட் ஆனார்.  அவரை அடுத்து சஞ்சு சாம்சன் ஏழே ரன்களில் ஆட்டம் இழந்தர்.   மற்றொரு தொடக்க வீரரான ஷார்ட் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.   அடுத்தடுத்து களம் இறங்கிய ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராக அவுட் ஆயினர்.   20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறந்தியது.   கொல்கத்தா அணியின் உத்தப்பா 36 பந்தில் 48 ரன்கள் எடுத்தர்.  நிதிஷ் ரானா 35 ரன்களும், அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 42 ரன்களும் எடுத்தனர்.    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நிதிஷ் ரானா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.