புதுடெல்லி:

உலகம் முழுவதும் பொதுவான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சட்ட ரீதியாக்கவும், முறைப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகம் முழுவதும் டிஜிட்டலில் பொதுவான பண பரிமாற்றம்தான் செய்யும் முறைதான் கிரிஸ்டல் கரன்சி. இதற்குப் பயன்படுத்தப்படும் பிட் காயினை வாலட்டில் சேர்த்து வைத்து உலகளாவிய பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்.

இதனை எந்த நாடும் தடை செய்ய முடியாது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த பிட் காயின் முறையிலான பரிவரத்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனினும், வங்கிகள் தங்கள் வாலட் மூலம் பிட் காயின் பண பரிவர்த்தனையை செய்ய அனுதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி காயின் க்ரச் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை எனப்படும் க்ரிப்டோ கரன்சி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, பரிவர்த்தனை நடைபெறும் பிட் காயின் முறைக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என கேள்வி அதில் கேள்வி எழுப்பியது.

இதற்கான பதிலை மத்திய நிதித் துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரத் துறை அளித்துள்ளது

அதில், க்ரிப்டோ கரன்சி எனப்படும் உலக அளவிலான டிஜிட்டல் பண பரிமாற்றத்தை இந்தியாவில் சட்டப்படியாக்கவும், முறைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனையை சட்டவிரோதம் என இந்தியா அறிவிக்கும் என்ற வதந்தியும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த உலகளாவிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து ஆராய பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் தலைமயிலான விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்கான வழி வகைகளை இந்த குழு ஆராயும் என்று கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்காத நிலையில், க்ரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் சட்டப்பூர்வமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.