புதுடெல்லி:
ந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், உயிரிழப்புகள் ஏதுவுமில்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று என்பது இரட்டை இலக்கத்தில் உள்ளது. தற்போது டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்களிடையே கவலை எழுந்துள்ளது. டெல்லியில் 5 சதவீதம் தொற்று உயர்ந்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலைக்கு பின் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தொற்று மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனை அடுத்து பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மத்திய மாநில அரசுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் முககவசம் அணியலாம் எனவும் அரசு தெரிவித்தது.

இதனால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வந்தது. ஆனால், சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதால் பாதுகாப்புடனும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் நடக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு காரணமாக முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.