கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என்று பிப். 14 ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 82 நாடுகள் பட்டியலிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 14 ம் தேதி மேலும் 12 நாடுகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என்று அறிவித்தது, பின்னர் ஏப்ரல் 7 ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள், ஆர்மீனியா, பெல்ஜியம், பிரேசில் மற்றும் லைபீரியா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இருந்தால் போதும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இன்று முதல் நைஜீரியா, எல் சல்வடார் மற்றும் ஹோண்டுரஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும் என்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது.