பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது.
அன்று சட்டபேரவை வளாகத்தில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார், பேரவைத்தலைவர் கியான் சந்த் குப்தா.


அதன் விவரங்கள் வருமாறு:

+ முதல்-அமைச்சர் உள்பட அனைவரும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பேரவைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
+ செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆணை பொருந்தும்.
+ இந்த சான்றிதழ் மூன்று நாட்களுக்குள் டாக்டரிடம் பெற்றதாக இருக்க வேண்டும், மூன்று நாட்களுக்கு முன்பாக பெற்ற சான்றிதழ் செல்லாது.
+ மேட் இன் சீனா’ முத்திரை குத்தப்பட பொருட்களான முகக்கவசம், சானிடைசர், கையுறை, காலணி உறை என எந்த சீன பொருளும் பேரவை வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது.
+பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
+ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாரும் , தங்களுடன் உதவியாளர்களை அழைத்து வரக்கூடாது.+ ஒவ்வொரு எம்.எல்.ஏ. இருக்கையிலும் அவர் வருவதற்கு முன்பாகவே, முகக்கவசம், சானிடைசர், கையுறை ஆகியவை அடங்கிய தொகுப்பு வைக்கப்படும்.
-பா.பாரதி.