கொல்கத்தா: ‍மேற்குவங்க தலைநகரில், கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகும் இருவரில் ஒருவருக்கு அந்த வைரஸ் தொற்று இருப்பதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில், பரிசோதனைக்கு உள்ளாகும் நான்கில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் கண்டறியப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவே, இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், அம்மாநிலத்தில், பரிசோதனைக்கு உள்ளாகும் 20 பேரில் ஒருவருக்குத்தான் வைரஸ் தொற்று என்ற நிலை இருந்தது. தற்போது நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது.

அம்மாநிலத்தில் இன்னும் சில கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், எஞ்சிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேகட்டமாக நடத்திவிடும்படி, தேர்தல் கமிஷனிடம் மன்றாடி கேட்டுக்கொண்டிருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால், தேர்தல் கமிஷன் அதை கண்டுகொள்ளவில்லை.

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், பாசிடிவ் கண்டறியப்படும் விகிதம் 45%-55% என்றும், மாநிலத்தின் பிற பகுதிகளில், அந்த விகிதம் 24% என்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.