திருவனந்தபுரம்

டிகர் மம்முட்டி உள்ளிட்ட 300 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மம்மூட்டி, ரமேஷ் பிரசாரடி

இந்த மாதம் 1 ஆம் தேதி கேரளாவில் தனியார் மருத்துவமனையில் ஒரு விழா நடந்தது. இந்த விழாவில் அறுவை சிகிச்சைகளில் ரோபோட்டை பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.  இதில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் ரமேஷ் பிசாரடி கலந்துக் கொண்டனர்.

தவிர இந்த விழாவில் மேலும் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் பலர் கலந்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே தடையை மீறி இந்த விழா நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி நடிகர்கள், மம்முட்டி, ரமேஷ் பிசாரடி, மருத்துவமனை நிர்வாக இயக்குநர், தலைமை  நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 300 பேர்  மீது தொற்று நோய் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.