டில்லி

கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி கூட்டிய கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.

மூன்றாம் அலை கொரோனா ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதையொட்டி மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்படும் என ஐ சி எம் ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி நாடெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் தற்போதைய கொரோனா நிலை குறித்து விளக்கம் அளிக்கவும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின்கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

ஆயினும் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகல் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.  மேலும் இடது சாரி கட்சிகளும் பிரதமர் மோடி கூட்டி உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.