டில்லி

டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது.

டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எனவே கடந்த 19 ஆம் தேதியில் இருந்து டில்லியில் ஊரடங்கு அமலாக்கப்ப்பட்டது.    அப்போது டில்லியில் தினசரி  பாதிப்பு சுமார் 28000 ஆக இருந்தது.   எனவே கடும் கரட்டுப்பாட்டுக்களுடன் கூடிய ஊரடங்கு அமலாக்கப்பட்டு அது 2 முறை நீட்டிக்கப்பட்டது.

தற்போது டில்லியில் தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 1600 ஆக உள்ளது.  அதாவது கொரோனா உறுதி சதவிகிதம் 2.5% ஆக சரிந்துள்ளது.   மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று நான்காம் முறையாக டில்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  இந்த நீட்டிப்பில் எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், “தற்போது டில்லியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் கொரோனா தொற்று 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது, குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் 1,600 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆயினும் சராசரியாக நாள்தோறும் டெல்லியில் ஆயிரம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,

மேலும் தொற்று குறைக்கப்பட வேண்டும்.என்றால் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ஆகவே  ஊரடங்கு 31ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனா தொற்று தொடர்ந்து குறையும் நிலையில் 31-ம் தேதியிலிருந்து படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்படும்.   இப்போது நாம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்றாலும் இதேநிலையைத் தக்கவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.