சேலம்: சேலம் உருக்காலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை , தமிழக  முதல்வர் ஸடாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

‘தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பள்ளிகள், கல்லூரிகள்,தனியார் பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிந்னறன.  மேலும், கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று டிட்கோ நிறுவனத்திற்கும் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், இன்றுமுதல் 2 நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் முதல்வர் ஸ்டாலி இன்று காலை சேலம் புறப்பட்டு சென்றார்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு சேலம் விமான நிலையத்தை சென்றடைந்தார்.

9.15 மணிக்கு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, 9.45 மணிவரை அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை மேற் காண்டவர், அங்கிருந்து பிகார் மூலம் புறப்பட்டு சேலம் இரும்பு ஆலை வளாகத்திற்கு சென்றார். அங்கு  500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை  திறந்துவைத்த முதல்வர், உள்ளே சென்று பார்வையிட் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

‘ சேலத்தைத் தொடர்ந்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்.

சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தின் வசதிகள்:

இந்த கொரோனா மையத்தின் நுழைவாயில் பகுதியில், இரு இடங்களில் செவிலியர்களுக்கான தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மையத்தில் நுழைபவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதற்கு நுழைவு வாயில் முன்பாக தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படுக்கைக்கும் 3 அடி இடைவெளி விட்டு, 10 வரிசைகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 5 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 500 படுக்கைகள் இந்த மையத்தில் ஏ,பி, சி டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இது ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக ஆண்,பெண் கழிவறை, கைகழுவும் ஏற்பாடு, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள படுக்கைகளின் போடப்பட்டுள்ளதற்கு நடுவில் 8 அடி இடைவெளியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் மையத்தின் பின்புறத்திலும் அவசரகால நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உருக்காலையில் இருந்து தனி ஆக்சிஜன் லைன் அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனியாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்துவதற்காக இரும்பாலை ஆக்சிஜன் உற்பத்தி களத்திலிருந்து சிகிச்சை மையம் வரை தனி பைப் லைன் அமைக்கப் பட்டுள்ளது.

வெயில் மற்றும் மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வசதியும், அதற்கு மாற்றாக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.