சென்னை:  தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இடையிடையே தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மீண்டும் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020)  தமிழக அரசு (அதிமுக அரசு)   ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்தபோது, மற்ற வணிக நிறுவனங்களைப்போல மதுக்கடைகளையும் திறந்து வியாபாரம் செய்து வந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.  கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

மேலும்,  ஊரடங்கால்  பாதிப்புக்குள்ளாகும் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை. அதை மத்திய அரசு உறுதியும் செய்யவில்லை. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தமிழகஅரசு மது விற்பனை செய்து வந்தது.  மது விலக்கால் கள்ளச் சந்தையில் மது விற்பனைக்கு வந்துதான் தீரும். அதனால், அரசு மது விற்பனையை கட்டுப்பாட்டோடு விற்கலாம். பணமில்லாத பரிவர்த்தனை, ஆன்லைன் மூலம் தொடர்ந்து மதுவை விற்கலாம் என்றும் சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தன.

கொரோனா தொற்று பொது  ஊரடங்கின்போது, தமிழகஅரசு, 40 நாள்  டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு திறந்தபோது ஏற்பட்ட பெரிய கூட்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும், டோக்கன் மூலம் விற்பனையும் செய்யப்பட்டது. இதை திர்க்கட்சிகள் கடுமையாக சாடின.  இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைனில் மது விற்பனை செய்ய தடையில்லை என கூறியிருந்தது.

தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதுடன்,  டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது. இதனால் தமிழகஅரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அரசுக்கு வருமானம் வரும் வகையில்,  Swiggy மற்றும் Zomoto மற்றும்  ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஊரடங்கு காலத்தின்போது, ஆன்லைனில் மதுவிற்பனை செய்ய நீதிமன்றம் பச்சை கொடி காட்டியுள்ளதால், ஆன்லைனில் மது விற்பனை செய்வதென்றால், டோர் டெலிவரி செய்வதற்கு ஏற்றபடி தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யவதற்காகன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உணவு டெலிவரி ஆப்பான ஸ்விக்கி, ஸோமேட்டோ, இந்த சேவையை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு விநியோக நிறுவனமான ஸோமேட்டோ, கொரோனா காலத்தில் மளிகை பொருட்கள், காய்கறி,  பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமுடக்கம் காலத்தில் டோர் டெலிவரி செய்து வருகிறது. இதன்முலம் டாஸ்மாக் மது பாட்டில்களையும் டெலிவரி செய்வது குறித்து யோசித்து வருகிறது.

ஏற்கனவே நிதி சிக்கலில் இருக்கும் தமிழக அரசு,  வருமானத்தை அள்ளித்தரும் டாஸ்மாக்கை மூட விரும்பாத நிலையில்,  ஆன்லைன் மூலம் விற்பனையை தொடர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.