கொரோனா: தமிழகத்தில் இன்று 5,495 பேர் பாதிப்பு, 76 பேர் உயிரிழப்பு!

Must read

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6277 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41ஆயிரத்து 649 ஆக உள்ளது.

இன்று ஒரேநாளில்  கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,307ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் தற்போது 47110 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,495 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 87,562 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,313 பேர் ஆண்கள், 2,182 பேர் பெண்கள்.

167 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 76 பேர் உயிரிழந்தனர். 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 39 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 6,227 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது.

More articles

Latest article