சுக்மா:

த்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்டு ஒருவர் தனது மாவோயிஸ்டு சகோதரியை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

ஒடிஷா, சத்தீஸ்கர் போன் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் கொடிகட்டி பறந்து வருகிறது. அவர்களை வேட்டையாட மத்தியமாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

மாவோயிஸ்டுகள், ஆண்டுதோறும் , ஜூலை 28ந்தேதி  முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை மாவீரர்கள் வாரம் கடைபிடிக்கின்றனர். இந்த நேரங்களில் கடுமையான தாக்குதல்களை நடத்துவார்கள்.

மாவோயிஸ்டுகளின் மாவீரர் வாரம் தொடங்கியதை முன்னிட்டு உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. படையினர் மீது தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தக் கூடும் என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவோயிஸ்டுகள் தங்களது மாவீரர்கள் வாரமாக இதையடுத்து ஒடிஷாவின் மல்காங்கிரி, ராயகடா பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து போக்குவரத்து முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஜூலை 29ந்தேதி அன்று சுக்மா மாவட்டத்தில் பாலேங்டாங் காடுகளில் உள்ள ஒரு குன்றில் 30பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் குழு கூடியிருந்த தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களை சுற்றி வளைக்கும் பணியில்,  சுக்மா காவல்துறையின் கோப்னியா சைனிக் (ரகசிய துருப்பு) மற்றும் ஆபரேஷன் பிரிவு தளபதி வெட்டி ராமா  ஆகியோர் தலைமையில் சுமார் 140 பேர் கொண்ட அதிரடி காவல்துறையினர்,  அவர்களை  வழிநடத்திய நபரின் குறிப்பு களைத் தொடர்ந்து இரவு முழுவதும் நகர்ந்து மாவோயிஸ்டுகள் பகுதியை அடைந்தனர்.

இதையடுத்து,  ஜூலை 29 காலை 7 மணியளவில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாலேங்டாங் காடுகளில் உள்ள ஒரு குன்றின் அருகே  இருந்த  மாவோயிஸ்ட் முகாமை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலின் போது, மாவோயிஸ்டு  குழுவின் உயர்மட்ட குழு உறுப்பினரான வெட்டி கன்னி (வயது 50) எனப்படும் மாவோயிஸ்டு பெண்ணை, காவல்துறையின் அதிரடிப்படையில் இருந்த அவரது சகோதரர் வெட்டி ராமா (வயது 43)  சுட்டுக்கொல்ல முயன்றால். ஆனால் அவர் தப்பி விட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதலின்போது, அக்காவும், தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நிலையில், ஒரு நிமிடம் அவர்களின் கண்கள் பணித்தன.   இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் எதிரெதிர் திசையில் நிற்க, வெட்டி கன்னியின் பாதுகாப்பு மாவோயிஸ்டுகள் வெட்டி ராமரை நோக்கிச் சுடத் தொடங்க அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய வெட்டிராமா, ‘“நான் அவளை (வெட்டி கன்னி)  நோக்கி சுட விரும்பவில்லை. நான் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், ஏனென்றால், சில நொடிகளில், அவளுடைய காவலர்கள் என் அணியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். எனவே நான் பதிலடி கொடுத்தேன். பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டேன், திடீரென்று அவள் காட்டில் காணாமல் போனாள், ”என்றார் ராமா.

வெட்டி ராமாவும் ஏற்கனவே மாவோயிஸ்டில் இருந்தவர்தான். அவரது தலைக்கு அரசு ரூ.6.5 லட்சம் பரிசு அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் சரணடைந்தார்.  ராமா சரணடைந்த பின்னர், அவரை காவல்துறையில் இணைந்து, ல வெற்றிகரமான மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கை களை நடத்த முடிந்ததாக காவல்துறை அதிகாரி (எஸ்.டி.ஓ.பி) சந்திரேஷ் சிங் தாக்கூர்  தெரிவித்துள்ளார்.