ஐந்து வயதாகும் ஸ்விக்கி நிறுவனம் : அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்

Must read

பெங்களூரு

ணவு அளிக்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் ஐந்து வருடங்களில் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் ஸ்விக்கி மற்றும் ஸொமடோ ஆகிய இரு நிறுவனங்கள் உணவு அளிப்பதில் முன்னிலை வகித்து வருகின்றன.   இவற்றுக்கு அடுத்தபடியாக ஃபுட்பண்டா மற்றும் உபேர் ஈட்ஸ் நிறுவனங்கள் உள்ளன.  பெங்களூரு நகரில் முதல் முதல் கால் பதித்த உணவு அளிக்கும் நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஐந்து வருடங்களாக நாடெங்கும் சேவை செய்து வருகிறது.

இந்த ஐந்து வருடங்களில் ஸ்விக்கி அதிக அளவில் வளர்ந்துள்ளது.  தினமும் இந்த நிறுவனத்துக்கு சராசரியாக 17,692 ஆர்டர்கள் வருகின்றன.  பெங்களூருவில் உள்ள் டிரஃபிள்ஸ் உணவகம் ஸ்விக்கி மூலம் 100, 1000, 10000 என ஆர்டர்கள் பெற்று வளர்ந்துள்ளது.  இதில் ஒரு முறை ஒரு வாடிக்கையாளர் ரூ.76,527  மதிப்பில் ஐஸ்கிரிம் ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் ஐதராபாத் நகரம் பிரியாணிக்குப் புகழ் பெற்றது ஆகும் ஆனால் நாடெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் பிரியாணி பிரியர்களாக உள்ளனர்.  ஸ்விக்கிக்கு சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் 43  பிரியாணி ஆர்டர்கள் வருகின்றன.   அதற்கு அடுத்தபடியாக தோசை மற்றும் பர்கர் வருகின்றன.  இனிப்புக்களில் குலோப் ஜாமுன் முதல் இடத்தில் உள்ளது.  அதை போல் ஸ்விக்கி மூலம் இந்தியர்கள் அதிக அளவில் விரும்பி பருகும் பானமாக காபி உள்ளது.

இந்த ஐந்து வருடங்களில் ஸ்விக்கி 290க்கும் மேற்பட்ட நகரங்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளித்து வருகிறது.  முதலில் உணவு வழங்கும் நிறுவனமாகத்   தொடரப்பட்ட ஸ்விக்கி தற்போது குருகிராமில் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்விக்கி ஸ்டோர்ஸ் என்னும் விற்பனையகத்தை தொடங்கி உள்ளது.  இதில் மளிகை, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.

More articles

Latest article