வாஷிங்டன்:  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர் , ஆசிரியரியரிடம் கற்றும் கொள்ளும் ஆர்வம் கொண்ட மாணவனைப் போன்றவர் என  அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தான் எழுதி உள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா  ‘A Promised Land’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், இந்தியாவைச்சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டும், அவர்களிடம் தான் பழகியது தொடர்பாகவும் தெரிவித்து உள்ளார்.

அதில், ராகுல் காந்தி  குறித்து எழுதியிருப்பதாவது, ராகுல்காந்தி பதற்றமான, கணிக்க முடியாத குணம் படைத்தவர் என்றும்,  மாணவர் ஒருவர் பாடங்களை அதிகம் படித்து தான் சிறந்த மாணவன் என்று ஆசிரியரிடம் காட்டிக்கொள்ள ஆர்வமாக இருப்பார். ஆனால் ராகுல் காந்தி பாடங்களை கற்க ஆர்வமில்லாமல் உள்ளார் என்றும், பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் ஜோ பிடன் போன்றவர்கள் குறித்த தனது கருத்தையும் குறிப்பிட்டுள்ளது

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது, இந்தியாவில்  மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது  மன்மோகன் சிங் பிரதமராகவும்,   காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் காந்தியும் இருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒபாமா இந்தியா வந்த போது ராகுலை சந்தித்து இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.