டெல்லி: 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதற்கு, பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பீகாரில் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஆட்சி மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு (2021ம் ஆண்டு) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பாஜக கூட்டணி கட்சியான ஜேடியு உள்பட பல பல மக்கள் கட்சிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து. இந்த வழக்கில், மத்தியஅரசு  பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனா பேரிடரில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதாலும் கணக்கெடுப்பை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதற்கான பட்டியல் உட்பட அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையில்,  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு உச்சநீதிமன்றம் இனி உத்தரவிட்டால் அது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி நிர்வாக ரீதியாகவும் சிக்கலை உருவாக்கும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், தற்போதைய மக்கள் தொகையில் சாதி வாரியாக எடுக்கப்பட்டாலும் சமூக பொருளாதார நிலை  குறித்த அதன் தரவுகள் துல்லியமாக நம்பத்தன்மை வாய்ந்ததாக இல்லை, அதனால் இந்த கணக்கெடுப்பால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை.. அதனால், 2021ம் ஆண்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை மத்தியஅரசு  எடுத்துள்ளதாகவும்,  அரசின் கொள்கை முடிவிற்கு மாறாக ஓபிசியை உள்ளடக்கிய சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பிரம்மான பாத்திரம் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளில் இடையே கடும்  விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜதாதளம், ஆர்ஜேடி, பிஎஸ்பி, சிவசேனா மற்றும் ஜேடியு, அப்னா தளம் மற்றும் பாமக உள்பட  பல்வேறு இந்துத்வா அமைப்புகள் ஜாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்தன. ஆனால், மோடி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று அறிவித்துள்ளது.

இதற்கு பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி நேரடியாக விமர்சித்து உள்ளது.  பாஜக அரசின் முடிவால் அதிர்ச்சியும் வருத்தமும், கவலையும் அடைகிறேன் என்று ஜேடியூவின் மூத்த தலைவர் கேசி தியாகி தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது,

இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது சாதியைக் கணக்கிடுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார் அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. பாஜகவைச் சேர்ந்த சுஷில் மோடி, சங்கமித்ரா மவுrரியா மற்றும் பங்கஜா முண்டே உள்ளிட்ட பல பாஜக எம்.பி.க்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட ஏன் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான புள்ளிவிவரங்களை அறிய சாதி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று கேட்டுள்ளனர்.

பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா (முந்தைய) சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஜார்க்கண்ட் கூட இப்போது அதற்கு ஆதரவாக வளைந்து வருகிறது. மத்திய அரசு ஒப்புக்கொண்டால் அதை நடத்த தாம் தயாராக இருப்பதாக சில மாநிலங்கள் கூற முன்வந்துள்ளன.

ஆனால், மோடி அரசு, இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியுள்ளது.  இதற்கு  எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, ஜாதிவாரி கணக்கெடுப்பை  உறுதி செய்வார் என்று கட்சி இப்போது வரை  நம்பி வந்தது. ஆனால், அரசு உச்சநீதிமன்றத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் சாதி கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரதமர் மோடியிடம் ஒரு குழுவை வழிநடத்தினார். குமார் தனது மாநிலத்தில் உள்ள பலவீனமான மற்றும் எண்ணிக்கையில் குறைவான ஆதிக்கம் செலுத்தும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பயனளிக்கும் வகையில் OBC களுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

 தேசிய ஜனநாயக கூட்டணியான அப்னா தளம் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு உரிய நீதி வழங்க சாதி கணக்கெடுப்பு அவசியம் என்று கூறியுள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கை செயல்படுத்தும் போது சாதி கணக்கீடு யூகத்தின் அடிப்படையில் மட்டுமே என்று மத்திய அமைச்சர் அனுப்ரியா பட்டேல் கூறியியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் என்டிஏ கூட்டாளியான சிவசேனா  மோடி அரசாங்கத்தை கடுமையாக சாடியது. சாதி கணக்கெடுக்கப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அது கோரி வருகிறது. மத்தியஅரசின் தரவுகளில் “தவறுகள்” இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தும் தனது கண்டனத்தை டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார்.  “மக்கள் தொகை கணக்கெடுப்பில், பாம்புகள்-தேள், கிளிகள், யானைகள்-குதிரைகள், நாய்கள்-பூனைகள், பன்றிகள்-ஓநாய்கள் போன்றவை பிற பறவைகள்-விலங்குகள்-தாவரங்களுடன் கணக்கிடப்படும், ஆனால் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவை அல்ல. வா! பிஜேபி/ஆர்எஸ்எஸ் ஏன் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது வெறுப்பு கொள்கிறது … பிஜேபி/ஆர்எஸ்எஸ் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஏமாற்றுகிறது என்று சாடியுள்ளார்.

BSP தலைவர் மாயாவதி, மத்திய அரசாங்கத்தின் இந்த பிரமாண பத்திரம் “மிகவும் தீவிரமானது மற்றும் மிகவும் கவலைக்குரியது” என்று கூறினார். இது பாஜகவின் ஓபிசி அரசியலின் தேர்தல் நலன்களையும் அதன் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அம்பலப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி பதில் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் கட்சிகள் பின்தங்கிய மக்களுக்கு என்ன செய்தார்கள், ஏன் அவர்களின் தலைவர்கள் தங்கள் உறவினர்களின் நலனுக்காக தங்களை மட்டுப்படுத்திக்கொண்டார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், பாஜகமீது அதன் கூட்டணி கட்சிகளே கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளதால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வேளாண் சட்டம் உள்பட பல மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் குரல் எழுப்பியுள்ள நிலையில், தற்போது, கூட்டணி கட்சிகள் பாஜக மீது மேலும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.