சர்வதேச கார் பந்தய மைதானங்களுக்கு இணையாக சென்னை தீவுத் திடலில் கார் பந்தய மைதானம் அமையவிருக்கிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துடன் (சிஎம்டிஏ) இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamilnadu – SDAT) இதனை செயல்படுத்த உள்ளது.

இதற்கான விவாதத்தை சிஎம்டிஏ துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் மற்றும் சிஎம்டிஏ-விற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் சென்னை தீவுத் திடலில் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.

ரூ. 50 கோடி மதிப்பில் 30 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த ‘பார்முலா 4’ கார் பந்தய மைதானத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதை அடுத்து விரைவில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயற்கை வனப்புடன் அமையவுள்ள இந்த நகர்ப்புர பொதுச் சதுக்கம் (Urban Square) கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், பல் அடுக்கு வாகன நிறுத்தம், திறந்த வெளி வாகன நிறுத்தம் இடங்கள், பூங்கா, உணவகங்கள் போன்றவை அமைய உள்ளன.

தவிர, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பார்முலா 4 கார் பந்தய மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.