டெல்லி: தமிழக முதல்வர் பிரதமர் மோடி உடனான சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழக தேவைகள் குறித்து முதல்வர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் இருந்தது. தனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தாக கூறிய ஸ்டாடாலின், தமிழகத்துக்கு எந்த கோரிக்கை என்றாலும் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறியவர்,  தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம் செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்தார்.

மேலும்,

கூடுதலா தடுப்பூசி வழங்க வேண்டும்,

செங்கல்பட்டு, ஊட்டி தடுப்பூசி மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,

ஜிஎஸ்டி நிலுவையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்

கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும்

அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.