டில்லி

ன்று பிரதமர் மோடியுடன் தாம் நடத்திய சந்திப்பு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பதவி ஏற்ற பிறகு இன்று முதல் முறையாக மு க ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.  டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடம் நீடித்துள்ளது.   இன்று காலை இதற்காக டில்லி சென்ற முக ஸ்டாலினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிடோர் வரவேற்றனர்.   இன்று மாலை 5 மணிக்கு அவர் பிரதமரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் மு க ஸ்டாலின், “இன்று பிரதமருடன் நடந்த சந்திப்பு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.  எந்த கோரிக்கை தொடர்பாகவும் எந்நேரத்திலும் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கப் பிரதமர் சம்மதித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்னும் அடிப்படையில் நிகழ்ந்ததாகத் தெரிவித்த மு க ஸ்டாலின் சில கோரிக்கைகளைப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். 

இது குறித்த விவரங்கள் பின் வருமாறு

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றப் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

நாடாளுமன்றம் & சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

மேகதாது திட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை , சென்னை மெட்ரோ 2ம் வழித்தடம் தொடங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

மேலும் மு க ஸ்டாலின், “மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடர்ந்து வலியுறுத்த உள்ளோம்.   தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.  டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.   நீதிமன்ற போக்கைப் பொறுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்”எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அளித்துள்ள 25 கோரிக்கை மனு விவரம் இதோ