சென்னை : அமெரிக்கா செல்ல ஆரவம் காட்டும் மக்கள் – விசா வாங்க கடும் கூட்டம்

Must read

சென்னை

மெரிக்கா செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் விசா வாங்க கடும் கூட்டம் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது.  எனவே வெளிநாட்டினர் அமெரிக்கா வர அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.   தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  மேலும் உலகெங்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.   இதனால் அமெரிக்க அரசு வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உள்ளது.

எனவே மக்கள் அமெரிக்கா செல்ல மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாகச் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகத்தில் விசா பெற மக்கள் கடுமையாகக் கூடி வருகின்றனர்.  இதற்கான நேரம் வழங்க தூதரகம் இணையம் மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளது.  இந்த இணைய தளம் ஒரே நேரத்தில் பலரும் முயற்சி செய்வதால் அடிக்கடி முடங்கி விடுகிறது.

சென்னையில் அதிக அளவில் மக்கள் விசா வாங்க கூடுகின்றனர்.  இதற்குக் காரணம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் வசிக்கும் மக்களும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தேடி வருவதால் என கூறப்படுகிறது.,  இதனால் பலரும் விடியற்காலை முதலே இணையத்தின் மூலம் இடம் பிடிக்க முயன்று பலரால் அது முடியாத நிலை உள்ளது.

இதனால் மாணவர்கள், அமெரிக்காவில் பணி புரிவோர் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர், “கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பணி புரிவோர் விசா வாங்க நேர ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இன்னும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பல இடங்கள் காலியாக உள்ளன.  இதை மேலும் அதிகரிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article