திருநெல்வேலி

க்கள் மீது அக்கறை உள்ளவர்கள் குறை கூறுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணி ஆற்றவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.

திருநெல்வேலியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.  அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம்,  மக்களவை துணை சபாநாயகர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் ஆறுகளில் பல தடுப்பு அணைகள் கட்டப்பட உள்ளன.   ரூ. 300 கோடி செலவில் மராமத்துப் பணிகள் மாநிலம் எங்கும் நடைபெற உள்ளன.   தடுப்பணை மூலம் சேமிக்கப்படும் நீரால் விவசாயம், குடிநீர்த்தேவை ஆகியவை பயன்பெறும்.    ஆயினும் இந்த அரசு மீது திமுக குறை கூறுவதை நிறுத்தவில்லை.   குறை கூறுபவர்கள் அதை நிறுத்திவிட்டு மக்கள் பணி ஆற்ற முன் வர வேண்டும்” என கூறி உள்ளார்.