நெல்லை,
ஜெபம்  செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த ‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் பல பெண்களிடம் கர்த்தர் பெயரை சொல்லியும், காதலிப்பதாக சொல்லியும் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

கிறிஸ்தவ மதபோதகர் இம்மானுவேல்
கிறிஸ்தவ மதபோதகர் இம்மானுவேல்

 
இளம்பெண்களை திருமணம் செய்வதாகவும், வேலை வாங்கி தருவதாகவும், கணவனுடன் சேர்த்து வைப்பதாகவும் என பல்வேறு காரணங்களுக்காக ஜெபம் செய்வதாக கூறி, அவர்களை ஏமாற்றி, அவர்களை பலவந்தப்படுத்தி, அதனை செல்போனில் படம் எடுத்து ஏமாற்றி வந்த பலே கில்லாடி மத போதகர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த இளம்பெண் உஷா,  கொடியன்குளத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் இளம்பெண்ணான லீமாகுமாரி, பாப்பான்குளத்தை சேர்ந்த இளம்பெண் அனுசியா ஆகியோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் தாங்கள் மத போதகரால் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் செய்திருந்தனர்.
இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து  தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், அனைத்து  இளம்பெண்களை மயக்கியவர்  ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் என்ற தில்லாலங்கடி கிறிஸ்தவ மத போதகர்தான் என  என தெரிய வந்தது.
போலீசார் விசாரணை செய்வது தெரிந்ததால் இம்மானுவேல் தலைமறைவானார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் 35 வயதான ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ். இவர் ஒரு கிறிஸ்தவ ‘டிரஸ்ட்’ ஆரம்பித்து ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத போதகம் மற்றும் ஜெபம் செய்து வந்தார்.
ஜெபம் செய்யும்போது, மக்களிடம் உங்களின் பிரச்சினைகளை இயேசு தீர்த்து வைப்பார்… பிரச்சினைகளை என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கதாக ஜெபிக்கிறேன் என்று சொல்லி ஜெபம் செய்வாராம்.
இதனால் பெண்கள் தங்களது கஷ்டங்களை கூறி அவரிடம் ஜெபம் செய்ய முறையிடுவார்களாம்.
அப்போது, இம்மானுவேல், தன்னிடம் கஷ்டத்தை சொல்லும் பெண்களில் அழகான, தனக்கு பிடித்தமான பெண்களுக்கு மட்டும் ஜெபிப்பதாக கூறி,  விவரங்கள் அறிந்து, அவர்களின் வீட்டுக்கு வந்து ஜெபிப்பதாக கூறி, அவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் வீட்டு உறுப்பினர்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் அறிவாராம்.
அதன்பிறகு அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதாக கூறி சென்று அங்குள்ள இளம்பெண்களை மயக்கி, வெளியூர் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு அழைத்து செல்வாராம்.
தங்கு விடுதியில் தங்க வைத்து, தகுந்த நேரத்தில் மிரட்டி அவர்களிடம் உடலுறவில் ஈடுபடுவாராம். அப்போது அவர்களை படம் எடுத்து வைத்துகொண்டு, தனக்கு தேவைப்படும்போது அவர்களை அழைத்து மிரட்டி பணம், நகைகள் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தாழையூத்தை இளம்பெண் ஒருவர் கூறியதாவது:
நான் எனது தோழி வீட்டுக்கு பாடம் படிக்க செல்வேன். அப்போது பக்கத்து வீட்டுக்கு ஜெபம் செய்வதற்காக வந்த போதகர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் எனக்கு அறிமுகமானார்.
அவர் எனக்கு அரசு வேலை கிடைக்க சிறப்பு ஜெபம் செய்ய போவதாக கூறி அடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்வார். மேலும், அப்போது என் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மி‌ஷம் செய்வார்.
ஒருநாள் என்னை வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றார். அங்கு என்னை பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார் என்றார். அவர் என்னுடன் லாட்ஜில் இருந்த படத்தை தனது செல்போன் மூலம் ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
அந்த படத்தை என்னிடம் காட்டி, என்னை பற்றி வெளியில் கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர்நெட்டில் போட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்றும் மிரட்டி அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்தார் என்று கூறினார்.
படம் வெளியிடுவதாக மிரட்டியதால், நான் இதை  யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டேன் என்றும், மேலும் என்னிடம் இருந்த 10 பவுன் தங்க செயின், வளையல்களையும் ஏமாற்றி அபகரித்து கொண்டார் என்றும் புகாரில் கூறி உள்ளார்.
இதுபோல மற்றொரு பெண், தனது கணவரை பிரிந்து இருப்பதை சாதகமாக பயன்படுத்தி, கணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
மற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
மற்றொரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடமும் உல்லாசம் அனுபவித்தாகவும் புகார் வந்துள்ளது.
இது போல பல குடும்ப பெண்களையும் மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
மத பிரசங்கம், ஜெபம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதுகுறித்து,  இம்மானுவேலிடம் ஏமாந்த பெண்கள் புகார் கொடுக்கலாம் அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தாழையூத்து போலீசார் அறிவித்துள்ளார்கள்.
இதனால் இவர் மீது மேலும் பல மோசடி புகார்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.
தலைமறைவாக இருந்த ஜோஸ்வா இம்மானுவேலை போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர்.
இன்று தனிஇடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.