2016ம் ஆண்டு காலாண்டு முடிவில் இந்திய ஐ.டி துறை கடும் சரிவை சந்தித்துள்ளது.
உலகளவில் 110 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 10 வருடத்தில் இல்லாத மிகவும் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2016ஆம் நிதியாண்டின் முடிவில் இத்துறையின் வளர்ச்சி மிகப்பெரிய சரிவை எட்ட உள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் ஐடி துறை இத்தகைய மோசமான நிலையை அடைய என்ன காரணம்..?

2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை இந்திய ஐடி நிறுவனங்கள் அறிவிக்க உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தான் சந்திக்கும் பல்வேறு பாதிப்புகளின் காரணமாக இந்நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப அளவுகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வங்கி மற்றும் நிதியியல் சேவைத் துறையில் மந்தமான வளர்ச்சி, ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுதல், பன்னாட்டு நிறுவனங்கள் ஐடி சேவைக்கான செலவீன குறைப்பு, அதிகரித்து வரும் விலைப்போர் என் இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டின் வளர்ச்சி 2வது காலாண்டு உடன் முடிவடையும் நிலைக்கு ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இக்காலாண்டில் ஐடி நிறுவனங்கள் மிகவும் குறைவான வருவாய் மற்றும் லாப அளவுகளை எட்டும் என கணக்கியலாளர்கள் கணித்துள்ளனர்.
டிசிஎஸ்:
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், ஏற்கனவே தனது மந்தமான காலாண்டு முடிவுகளை எதிர்கொள்ள உள்ளதாகப் பல செய்திகளை வெளியிட்டு, முதலீட்டாளர்களின் தேவையில்லாத ஏதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்துடன் நடுத்தர ஐடி நிறுவனமான மைன்டுட்ரீ நிறுவனமும் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து தப்பித்துக்கொண்டது.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுடன் தொடர்ந்து போட்டி போட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம் தனது மோசமான முதல் காலாண்டு முடிவுகளுக்குப் பின் 2016ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சி அளவுகளைக் குறைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சந்தையின் டாப் 5 நிறுவனங்களின் மொத்த வருமானத்தின் வளர்ச்சி இக்காலாண்டில் வெறும் 1.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடத்தில் இதுவே மிகவும் மோசமான 2வது காலாண்டு முடிவுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடித்துறை குறித்த கணிப்புகள் இப்படி இருக்கும் நிலையில், எச்சிஎல் டெக் மற்றும் இன்போசிஸ் வளர்ச்சியிலும் (குறைவான வளர்ச்சி), விப்ரோ நிறுவனம் சரிவிலும், டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனம் நிலையான வருவாய் அளவுகளைப் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 10ஆம் தேதி வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ‘டிசிஎஸ்’ மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கி 2 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிந்து 6 மாத சரிவை அடைந்து, இதனால் முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைந்தனர்.
hqdefault
இதன் எதிரொலியாக இந்திய சந்தையின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் சுமார் 40,000 கோடி ரூபாயை இழந்தது.
அமெரிக்கச் சந்தையில் வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் தொழில்நுட்ப சேவைகளுக்காகச் செலவிடும் தொகையைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்கச் சந்தையின் மூலம் இந்தியா ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை (BFSI) பிரிவின் வாயிலாகத் தான்.
அதிலும் டிசிஎஸ் நிறுவனம் மிகவும் அதிகளவிலான அமெரிக்க நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கான வரி வசூல், நிதி பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே வளர்ச்சியில் பாதிப்புண்டாகும் என டிசிஎஸ் அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் BFSI பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைக் கொண்டுள்ளது இன்போசிஸ். இதற்கு அடுத்து விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் டெக் மஹிந்திரா, எச்சிஎல் நிறுவனங்களைக் காட்டிலும் டிசிஎஸ், காக்னிசென்ட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் BFSI பிரிவில் அதிகளவில் சார்ந்துள்ளது.
வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது முற்றிலும் தவறான போக்கு. இதேப்போன்று இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைச் செய்தால் மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்திக்கும் குட்ரிட்டன்ஸ் சந்தை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பாதிப்பு
இத்தகைய சூழ்நிலையில் ஐடி நிறுவன ஊழியர்கள் ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதே தற்போதைய கேள்வி.
கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் வர்த்தகப் பாதிப்பு மற்றும் செலவீன குறைப்பு ஆகியவற்றின் மூலம் கணிசமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.
அதேபோல் பெரு நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தாலும் ஊதிய உயர்வில் அதிகளவிலான பாதிப்பு ஏற்படும் என கணிப்புகள் தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் டெக் மஹிந்திரா, எச்சிஎல் நிறுவனங்களைக் காட்டிலும் டிசிஎஸ், காக்னிசென்ட் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் BFSI பிரிவில் அதிகளவில் சார்ந்துள்ளது.
வளர்ந்து வரும் இந்திய சந்தைக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது முற்றிலும் தவறான போக்கு. இதேப்போன்று இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைச் செய்தால் மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்திக்கும் குட்ரிட்டன்ஸ் சந்தை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
 
Source: www.goodreturns.in