மதுரை:
சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் இடப்பட்டுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் போடப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.