விழுப்புரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

Must read

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவ புரத்தை திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின் அந்த வீடுகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார். மேலும் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் உருவ சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

More articles

Latest article