தமிழ் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. விடுதலை படத்தில் கதாநாயகனாக தனது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதேவேளையில் தனது ரசிகர் மன்றம் மூலம் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு நற்பணிகளையும் செய்து வருகிறார்.

தற்போது தனது அடுத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.

அங்கு அவரது கேரவனை சூழ்ந்துகொண்டு குழந்தைகள் அவரது கேரவேனுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தனர்.

குழந்தைகளை மகிழ்விப்பதற்காக தனது கேரவேனுக்குள் அனுமதித்த நடிகர் சூரி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்ந்தார்.

இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி, “மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.

கருடன் என்று பெயரிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்திற்காக சமீபத்தில் கும்பகோணம் சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.