சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ  படத்தில் டிரெய்லரில் , அவர்  ஆபாச வார்த்தை பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக  லியோ படக்குழு மீது இந்து மக்கள் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்களில் ஆபாச வார்த்தைகள் இடம்பெறுவது வாடிக்கையாகி வருகிறது. சென்னையின் ஆபாச வார்த்தையான ஓ….தா, தேவ……., பாடு, மயிறு  போன்ற வார்த்தைகள் சகஜமாக கூறப்படுகின்றன. ஏற்கனவே, முதல்வன், இருமுகன், ஆதித்யா வர்மா, மங்காத்தா, என்னை அறிந்தால், லவ் டுடே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகர்கள் ஆபாச வார்த்தைகளைப் பேசி உள்ளனர். இதுபோனற் வார்த்தைகள் பேசுவதை திரையுலகினர் பேஷனாகவே கையாண்டு வருகின்றனர்.  இதற்கு சமுக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை கண்டுகொள்வது இல்லை.

இந்த நிலையில், லியோ படத்தின் டிரெய்லர்  வெளியாகனது. இதில் நடிகர் விஜய் பேசும் ஆபாச வார்த்தை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த படத்தில், நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், லியோ படத்தின்  டிரெய்லரை படக்குழு அக்டோபர் 6ந்தேதி மாலையில்,  சமூக வலைதளத்தில் வெளியிட்டது.  இந்த டிரைவலர் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்றதுடன்   சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது. .  இந்த டிரைய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லியோ பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.