சென்னை

சென்னை ரோகிணி திரையரங்கில்  லியோ டிரெய்லரை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் நாற்காலிகலாய் சேதப்படுத்தி உள்ளனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின். கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி. மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.  இதையடுத்து நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இந்த ட்ரைலர் வெளியிடப்பட்டது.  விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கைச் சூழ்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.  திரையரங்கினுள் குவிந்த ரசிகர்கள் ட்ரைலரை உற்சாகமாகக் கண்டு ரசித்தபோது, அங்கிருந்த நாற்காலிகளைக் கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.