மேஷம்

கணவன்-மனைவிக்குள் தேவையே இல்லாமல் வீண் வாக்குவாதம் வந்து கொஞ்ச நேரத்தில் சரியாகும். மகன் அல்லது மகள் பற்றிய விஷயத்துக்குத்தான் சண்டை போடுவீங்க.  கடைசியில் அவங்க சிரிச்சுக்கிட்டே உள்ளே புகுந்து சமாதானப்படுத்திடுவாங்க. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இல்லாதபடி கேர்ஃபுல்லாப் பார்த்துக்குங்கப்பா. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீங்க. உத்யோகத்துல வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். வேற்று மதத்தவர் அல்லது வேற்று நாட்டவர்கள் அறிமுகமாகி நன்மை செய்வாங்க. வியாபாரத்தில் தள்ளிப் போயிக்கிட்டிருந்த வாய்ப்புகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். உத்யோகத்துல மேலதிகாரிங்க  உங்களுடைய கோரிக்கையை ஏற்பார்கள். இனிமையான வாரம்.  புதுசா ஒரு விஷயத்தைக் கத்துப்பீங்க. ஒங்களோட மதிப்பு இன்கிரீஸ் ஆகும். மனைவியை சம்ளிப்பீங்க.

ரிஷபம்

மனசுல தேவையே இல்லாமல் ஒருவித பயம் இருந்துக்கிட்டே இருந்தாலும்கூட, எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மனசுக்குத் திருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த காரியங்கள் பெரிய மனிதர் ஒருவருடைய  தலையீட்டால் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போவது நல்லதுக்குதாங்க. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்யோகத்துல இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாங்க. பாராட்டவும் செய்வாங்க. கடந்த சில வாரங்களா இருந்துகிட்டிருந்த ஆரோக்ய பிரச்னை முடிவுக்கு வரும். முதுகு/ வயிற்று வலி சரியாகும்.

மிதுனம்

புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கப்போகுதுங்க. அவங்களால நிறைய நன்மைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகுதுங்க. புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீங்க. பிற்காலத்தில் அதில் எக்ஸ்பர்ட் ஆவீங்க. அப்பாடா. ஒரு விஷயத்தில் சந்தோஷம். என்ன தெரியுமா? வார்த்தைகளில் நிதானம் காப்பீங்க. இதனால பிரச்சினைகளிலிருந்து தள்ள இருக்க முடியும். காலம் பொன் போன்றது என்பதற்கேற்ப, ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்துவீங்க. குழந்தைங்களுக்கு இடையே நிலவும் இன்னல்களை தீர்ப்பீங்க. மற்றவர்களின் மனதில் இடம்பிடிப்பீங்க. கிரகங்களின் சாதகமான பார்வையினால், நினைச்ச காரியங்கள் நினைச்சபடி நடக்குமுங்க. மனதில் ஆன்மிக எண்ணங்கள்  அதிகரிக்கும். களைப்பும், சோர்வும், தூக்கமும் இருந்தாலும் தள்ளிப்போட்டுக் கடமைங்களை முடிக்கப் பாருங்க.

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீங்க. அவங்களும் அதை நல்ல விதமாய்ப் புரிஞ்சுப்பாங்க. அதிக விரயம் ஏற்படும் வாரம் என்பதால் கவனமா இருங்க. அந்தச் செலவுகள் நல்ல  பலன் தரும்.சந்தோஷம் அளிக்கும். சுப காரியங்களுக்கான செலவுகள் அவை.  பல காலமா ஆட்டிப்படைச்சுக்கிட்டிருந்த முக்கியமான நிதி பிரச்னைகளிலிருந்து விடுபடுவீங்க. கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அலவலகத்தில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீங்க. ஒரு விஷயத்தைக் கண்டிப்பா நினைவில் வெச்சுக்குங்க.  வார்த்தைகளில் நிதானம் காத்தால், மற்றவர்களின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மன சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்துல மட்டும் நூறு பர்சன்ட் கவனம் செலுத்திடுங்க போதும்.

சிம்மம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அக்கா அண்ணனுங்க எல்லாம் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அலவலகத்தில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அந்தச் சந்திப்பு நல்ல ரிசல்ட் அளிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திட்டங்கள் நிறைவேறும் வாரம். இந்த வாரம் உங்களோட பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகன்களும், மகள்களும் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவாங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிட்டு  வருவீங்க. அரை குறையாக நின்று போயிருந்த வேலைங்க முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. எதிலும் தடைங்களும் தாமதங்களும் இருந்துக்கிட்டுதான் இருக்கும். ஆனாலுல் எதையும் முழுமையா முடிப்பீங்க. டோன்ட் ஒர்ரி.

கன்னி

உத்யோகத்துல புது சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் வாரம். முன்பு எதற்கெல்லாம் போராடினீங்களோ அதெல்லாம் அநாயாசமாய் முடியும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைச்சாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர மனபோக்குதான் காரணம் என்பதை உணர்வீங்க. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்துல மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீங்க. விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். மேலதிகாரிங்களோட செயல் டென்ஷன் தரும். ஆனால் அவங்க உங்களுக்கு நல்லது செய்யத்தான முயற்சி செய்துக்கிட்டிருக்காங்கன்னு விரைவில் புரிஞ்சுக்குவீங்க. குடும்பத்துல ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.  வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு வரும். சிரிப்பும் பொழுது போக்கும் இன்கிரீஸ் ஆகும். பேச்சினால் வந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும்.

துலாம்

அலுவலகத்தில் நிறையக்காலமாய்ப் பலருக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீங்க. இதனால் எல்லோரும் பாராட்டுவாங்க. குறிப்பா மேலதிகாரிங்க கிட்ட ‘சபாஷ்’ வாங்குவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்துல சக ஊழியர்கள் உதவுவாங்க. நன்மை நடக்கும்  வாரம். முன்பு நீங்க உழைத்து மற்றவர்களுக்கு நல்ல பெயர் வந்துக்கிட்டிருந்தது. இப்போ உங்களைத் தேடியே பாராட்டு வரும். குழந்தைங்க கொடுத்து வந்த டென்ஷன் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.  வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் நெருங்கிய சிநேகிதி/ சிநேகிதரால் தீர்த்துவைக்கப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். விரக்தியும் வேதனையும் இருந்த நிலை மாறி, வேலைப்பளு குறையும். உங்க கவர்ச்சி அம்சம் குறையாமல் வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

ஃபாதர் அல்லது பாட்டன் வழி சொத்து பற்றிய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்துல உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் வாரம் இது. எதிர்பாராத பணவரவு உண்டு.  உழைப்பு அதிகரிக்கும். முன்பெல்லாம் உழைத்த உழைப்புக்குப் பலன் இல்லாமல் இருந்தது. அல்லது குறைவான பலன் இருந்தது அல்லவா? இனி அப்படியே ஆப்போசிட். சிறிது உழைத்தாலும் நல்ல பலன் இருக்கும். போதாக்குறைக்குப் பலர் உங்களை இளக்காரமாய்ப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இகழ்ந்த வாய்களும் உங்களைப்  புகழ ஆரம்பிக்கப்போகுது பாருங்களேன். மதருக்கும் ஒங்களுக்கும் இடையே இருந்துக்கிட்டிருந்த சச்சரவுங்க முடிவுக்கு வரும். வாகனம் தொல்லை கொடுத்து செலவு வைக்க சான்ஸ் இருக்குங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. நீண்ட காலப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வழிபாட்டுத் தலங்களுக்கு யாத்திரை போக சான்ஸ் வரும். புதியவர்கள் அறிமுகமாவாங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீங்க. ஆரம்பத்தில் அகலக்கால் வேண்டாம். போகப்போக பிசினஸ் பெருகும். கொஞ்சம் பொறுமையா இருங்க. குழந்தைங்களால் நன்மை உண்டாகும்.  உத்யோகத்துல முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. பட்… அப்படி எடுக்கறதுக்கு முன்னால் அனுபவம் பெற்ற பெரியவங்களை கன்ஸல்ட் செய்துட்டுப் பிறகு எடுக்கலாமே. உங்களோட தேவைகள் பூர்த்தியாகும் வாரம். நீண்ட நாளாக பார்க்க நினைச்ச ஒருவரைச் சந்திப்பீங்க. வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிக்கும்படியா இருக்கும். கடந்த சில வாரங்களா குழந்தைங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த பிராளப்ளம்ஸ் எல்லாமே ஜீரோ பேலன்ஸ்க்கு வந்து உங்க வயத்துல மில்க் வார்க்கும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

உத்தியோகத்துல சூழ்ச்சிங்களை முறியடிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத உதவி கிட்டும். கம்பீரமாகப் பேசிச் சில காரியங்களை முடிப்பீங்க. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவாங்க. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அலுவலகத்தில் நீங்க மிக மதிக்கும் ஒருவர் உத்யோகத்துல சில நுணுக்கங்களை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். வெற்றி பெறும் வாரம் இது. வாய்ப்பை நழுவ விட்றாதீங்க. எதை எடுத்தாலும் தடை வருதே.. தாமதம் ஏற்படுதேன்னு புலம்பிக்கிட்டிருக்காதீங்க. அத்தனை தடைங்களையும் மீறியும் வெற்றியும் சந்தோஷமும் கடைசியில் கிடைப்பதைப் பாத்து சந்தோஷப்படுங்க. வாகனங்களால் செலவும் பிராப்ளம்ஸ்ஸூம் இவ்ளோ காலம் ஏற்பட்டுக்கிட்டிருந்துச்சு இல்லையா. அதெல்லாம் இனி நோ.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 10 முதல் அக்டோபர் 12 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கும்பம்

வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறிச்சு யோசிப்பீங்க. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீங்க. சமூகத்தில் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீங்க. பிள்ளைங்களைப் புதிய பாதையில் வழி நடத்துவீங்க. தோற்றப்பொலிவு இன்கிரீஸ் ஆகும். உங்க அட்ராக்ஷன் காரணமாய் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவங்களுக்கு உங்க மேல பிரமிப்பு மட்டுமில்லாமல் மதிப்பும் மரியைதையும்கூட வரும். பயணங்கள் சிறப்பா அமையுமுங்க. பல காலம் இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீங்க. காய்கறி பழம் போன்ற வியாபாரத்தில் செழிப்பு உண்டாகும். உத்யோகத்துல உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள் இருந்தாலும் விரைவில் சரியாகும். முன்னாடி காய்விட்டு விலகிப்போயிருந்த நல்லவங்க கூட மறுபடியும் சேரும் நாள்பார்க்கச் சொல்லுங்க.

மீனம்

உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கற வழியைப்பாருங்க. எடுத்த எடுப்புலயே பலன் காணாமல் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெரிய நன்மைகளுக்கு இன்னும் கொஞ்சகாலம் காத்திருங்க. உத்யோகத்துல பணிகளைப் போராடி முடிப்பீங்க. குறிப்பா அவசரமாய் முடிக்க வேண்டிய விஷயங்களை அந்தந்த நேரத்திற்குள் மடிக்க முடியாமல் சற்றே ஆட்டம் காட்டும். நீண்ட முயற்சிக்கும் காத்திருப்பிற்கும் பிறகு, உத்யோகரீதியாக உங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் உடைபடும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவாங்க. பிரியமானவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பீங்க. தட்ஸ் இஸ் ரைட். நீங்க முப்பது வசுக்கு உட்பட்டவங்களா? அப்பிடின்னா யார் கிட்டயும் யாரைப் பத்தியும் வத்தி வைக்காதீங்க.