கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய வாழ்த்து மடலில், ” காவல் ஆய்வாளர் மாத்தையன் அவர்களுக்கு வணக்கம். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி,  பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உரிய சூழலை உறுதி செய்வதை , காவல் துறையின் முதன்மை பணியாகும். பணியினை திறம்பட சீருடை பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாக மதிப்பினை பெறுகிறார்கள்.

கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளரான தாங்களும்,  தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியை மேற்கொண்டு நிலையில், அதிகாலை 3மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்தேகத்திற்கிடமான,  இரண்டு இளைஞர் களை தாங்கள் விசாரிக்கையில் சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள்,  மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களை தடுக்க முயன்று சண்டையிட்டதால் தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று அவர்களில், ஒருவரை தாங்களும் காவலர்களும் பிடித்து இருக்கிறீர்கள்.

அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில்,  மற்றொரு அனைவரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்து அவர்கள் வசமிருந்த,  திருட்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து இருக்கிறீர்கள். மக்கள் உழைத்து சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களை திட்டமிட்டு, திருடிய நபர்களை தங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிய சட்டத்தின் முன் நிறுத்தி, அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

தங்களின் துணிச்சல் மிக்க செயல் பாடு காவல்துறையில் உள்ள நேர்மையான, துணிச்சலான, அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும் . தங்களின் வீரத்தை செயலினை தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டியுள்ள நிலையில்,  காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையில்,  என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமரசமின்றி நிலை நாட்டும் தமிழ்நாடு காவல் துறையினரின் துணிச்சல்மிக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரட்டும்” .

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.