சென்னை: தமிழக  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி முடிவடைந்த நிலையில், இன்று திமுக வேட்பாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் நேற்று ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்​த​தால்,  வரலாறு காணாத அளவில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டியுள்​ளது.  இது விவாதப் பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு கழக வேட்பாளர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை  அண்ணா அறிவாலயம் சென்று நேரில் சந்தித்தனர்.

அப்போது, அவர்களுடன் ஸ்டாலின் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பின்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தார்.

[youtube-feed feed=1]