சென்னை:  தேர்தல் பிரச்சார களைப்பு காரணமாக  துணைமுதல்வர் உதயநிதி ஓய்வெடுக்கும் வகையில் மனைவி மற்றும்  குடும்பத்துடன் வெளிநாடு சென்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்றது.  முன்னதாக  அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக  துணை முதலமைச்சர் உதயநிதி மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால்,  தேர்தல் களைப்பை போக்கு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன்   வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், இன்று காலை தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]