பெங்களூரு: குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும் என ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும்  ராகுல்காந்தி, தசரா பண்டிகையையொட்டி 2 நாள் யாத்திரைக்கு விடுமுறை அளித்தார். அப்போது  அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை பார்வையிட்டார். அப்போது, தாய் யானையுடன் இருந்த குட்டி யானை ஒன்றின் வால் மற்றும் தும்பிக்கை பகுதியில் அடிபட்டிருந்தை கண்டு வருத்தமடைந்தார். அந்த குட்டி யானைக்கு உடனடியாக  சிகிச்சை வழங்க வனவிலங்கு அதிகாரிகளிடம் கூறியதுடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதினார்.

இநத் கடிதத்துக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.  ராகுல்காந்தியின் வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், காயமடைந்த யானைக் குட்டிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்ததுடன், இதுதொடர்பாக 30 நிமிடங்களில் அறிக்கை தரும்படி வனத்துறையிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.