அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி துணை நிலை ஆளுநர் (எல்.ஜி. – LG) வி கே சக்சேனா இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காட்டமாக கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளதாவது :

“LG அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டுவதில்லை.

என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை LG எனக்கு எழுதியுள்ளார்.

நீங்கள் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். அதுபோல் உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதிக்கு அவமரியாதை’ ஏற்படுத்தியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது துணை நிலை ஆளுநர் சக்சேனா காட்டம்…