நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை திருச்சி சூர்யா சிவா-வுக்கு வழங்கி இருக்கிறார்.

பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா-வுக்கு இணையவழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார்.

திருச்சி சூர்யா சிவா

கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை ஏற்றுக்கொண்டு சூர்யா சிவா நன்றி தெரிவித்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் உள்ளது.

ஆஸ்திரேலியா-வுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் உள்ளதாகவும் அதற்கு கைலாசா என்று பெயர் வைத்து தனது நாடாக அறிவித்தார். ஆனால் இந்த தீவு குறித்தோ அல்லது இதன் அங்கீகாரம் குறித்தோ வேறு எந்த நாடும் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

கைலாசா நாட்டிற்கு எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும் மூன்று நாட்கள் மட்டும் வந்து தங்கிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நித்யானந்தா அறிவித்தபோதும் அதற்கான மார்க்கம் என்ன என்பதை குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவருக்கு தனது நாட்டின் சார்பாக விருது வழங்கி இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.