சென்னை:

மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை 118.9 கி.மீ மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணி அடுத்த ஆண்டு  (2020) மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மண் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், முதலில் மாதவரம் முதல் தரமணி வரை  சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

.

சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள  மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணிக்கு தேவையான நிதி உதவிக்கு, தமிழக அரசு  அரசு ஜப்பான் அரசுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் காரணமாக  2-ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத்  திட்டம் மாநில அரசு திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் முதல்கட்டப் பணிகள் ஏறக்குறைய முடிவடையும்  நிலையில் உள்ளது. இதையடுத்து, 2வது கட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைப்பெறும் வகையில், அதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 118.9 கி.மீ தூரம் வரை பணிகள் நடைபெற உள்ளது.  இந்த திட்டப் பணிகளுக்காக ரூ.20,196 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அதன்படி,  2028ம் ஆண்டு‘ ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவையில் 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரையிலும், களங்கரை விளக்கம் முதல் சிஎம்பிடி வரியிலும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாதவரம் முதல் தரமணி வரை  சுரங்கம் அமைக்கும் பணி முதலில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.