2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி துவங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தனது 9 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மெட்ரோ ரயில் துவங்கிய புதிதில், 2016-17 காலகட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 10000 பேர் மட்டுமே பயணித்த நிலையில் கடந்த 23-6-2023 அன்று ஒரே நாளில் 2,81,503 பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது.

சென்னை ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையும் சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரையும் எந்த வித போக்குவரத்து நெரிசலும் இன்றி சௌகரியமாக பயணம் செய்ய உலக தரம் வாய்ந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து பெரிதும் உதவியாக இருப்பதை அடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் இரண்டாவது கட்ட பணிகள் நிறைவடையும் போது நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் சென்னை மெட்ரோ ரயில் இன்று தனது 8 ஆண்டு பயணத்தை முடித்து 9 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை அடுத்து பயணிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.