சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில், மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் அதிகாரிகள் இரவோடு இரவாக களமிறங்கி,  மழைநீர் அகற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேயரின் அதிரடி ஆக்ஷன் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகஅரசு மற்றும் மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக முக்கிய பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது. முக்கிய சுரங்க பாதைகளில் உள்ள நீரும் அகற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறுகிறது. இது தொடர்பாக புகைப்படங்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், மாநகர் முழுவதும் வெள்ளக்காடாது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடியாததால், தண்ணீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்தியது.  மேலும் நந்தனம், கேகே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது.

பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை நகரின் தாழ்வான பகுதிகளை கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் நள்ளிரவு என்றும் பாராமல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரிகளுடன் மழை நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து, சென்னை மாநகர மேயர் பிரியா உள்பட மாநகராட்சி அதிகாரிகள், நள்ளிரவு மழைநீர் தேங்கிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி, தேங்கி தண்ணீரை அகற்றி நடவடிக்கை எடுத்தார்.  வாக்கி டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சில இடங்களில் மழைநீரை அகற்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், அந்தந்த பகுதி மண்டல அதிகாரிகளை அழைத்து இரவோடு இரவாக மழைநீரை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மழை கோட் அணிந்தபடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். கனமழை கொட்டி தீர்த்த நிலையில், வாக்கி டாக்கியுடன் மேயர் பிரியா இரவில் பணியாற்றியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பல இடங்களில் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கும் நிலையில் அதனையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.