சென்னை: நவம்பர் 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி! தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 2ந்தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த  அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழகஅரசு முறையான பதில் அளிக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள், அன்றைய தினம் சமூக ஒற்றுமை மனித சங்கலி நடத்துவதாக ஏட்டிக்குப்போட்டியாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை காரணம் காட்டி காவல்துறை அனுமதி வழங்க மறுத்து வருவதாக தெரிவித்தது. இதையடுத்து,  ஆர்எஸ்எஸ் பேரணியை மாற்றி வைக்க அறிவுறுத்திய நீதிமன்றம், நவம்பர் 6ந்தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.

அதன்படி, “நவம்பர் 6ந்தேதின்று  தமிழகத்தில் RSS சார்பில் அனுமதி கோரியிருக்கும் 50 அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதியளிக்க வேண்டும். அனுமதி அளிக்காத பட்சத்தில் நீதிமன்றமே அனுமதி அளிக்கும்.”  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னதாக  நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.