சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது.

புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905 விற்பனை மண்டலங்களில் வியாபாரம் செய்ய விரைவில் இ-டெண்டர்கள் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.

மாநகராட்சியின் அனுமதி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை மண்டலங்களில் கடைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். புதிய கடைகள் மற்றும் பதிவு செய்யப்படாத கடைகள் கண்காணிக்கப்படும்,” என்று மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட வியாபாரிகளுக்கு விற்பனை சான்றிதழ் வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது.