சென்னை:
போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் 1.35 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது

ஜொமைட்டோ, ஸ்விக்கி டெலிவரிபாய்ஸ் உணவுகளை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதால் போக்குவரத்து விதிகளை மீறி இருப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து விரிவாக விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்திருப்பதாகவும் போக்குவரத்துகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.