சென்னை

ந்திரயானின் லேண்டர் அடுத்த 4 நாட்களில் தரை இறங்குவதா தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்கும் ‘விக்ரம் லேண்டர்’ வெற்றிகரமாகத் தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது. நிலவு சுற்று வட்டப்பாதையில் நெருங்கிவரும் நிலையில், திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.47 மணிக்கு நிலவில் லேண்டர் தரையிறங்க இருக்கிறது. இப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   இன்று  மீண்டும் நிலவு சுற்று வட்டப்பாதையில் லேண்டரின் உயரத்தைக் குறைக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள்,

“இதுவரை சந்திரயான்-3′ விண்கலத்தின் 40 நாள் நிலவு பயணத்தில் 35 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அடுத்த 4 நாட்களும் மிகவும் முக்கியமானவை. இந்நாட்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு நிலவில் லேண்டர் மெதுவாகத் தரையிறங்க வேண்டும். இது குறித்த சிக்னல் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டருக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்குப் பிறகு லேண்டர் தானியங்கி முறையில் செயல்படும்..

நிலவுச் சுற்றுப்பாதையில் இருந்து, ஒரு நொடிக்கு 2 கி.மீ. ஆக இருக்கும் லேண்டரின் வேகம், மேற்பரப்பை தொடும்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுவிடும். வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நிலவில் தரையிறங்குவதற்கு லேண்டர் எடுத்துக்கொள்ளும். இதுவே இந்த திட்டத்தின் முக்கிய சவாலாகும். ஏற்கனவே ‘சந்திரயான்-2’ தோல்வியடைந்தது இந்த இடத்தில்தான் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

லேண்டரின் அடிப்பகுதியில் 3 குட்டி ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து, லேண்டர் மெதுவாகத் தரையிறக்கப்படும். பிறகு 2 மணி நேரம் கழித்து லேண்டரில் இருந்து சாய்வு பலகை போன்ற அமைப்பின் மூலம் ‘பிரக்யான் ரோவர்’ வெளியே வந்து நிலவில் கால் பதித்து தொடர்ந்து 14 நாட்கள் நிலவில் ஆய்வுப்பணியில் முழுவீச்சுடன் ஈடுபடும். ”

என்று தெரிவித்துள்ளனர்.