மராவதி

கிழ்ச்சியான ஆந்திரா என தேர்தலில் சந்திரபாபு நாயுடு பிராசரம் செய்த போதும் தேர்தல் முடிவுகள் அவருக்கு மகிழ்வினமையை அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்கள் ஆகின. இதில் ஆந்திரபிரதேச மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பு ஏற்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஆந்திர பிரதேச திட்டத் துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 661 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 117 வார்டுகளில் வசிக்கும் 15960 பேர் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஆந்திர மாநிலத்தில் ஊழல் என்பது எங்கும் இல்ளை என கணக்கெடுப்பில் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் நாயுடுவின் மனதைக் கவரும்படி அடுத்ததாக மற்றொரு கணக்கெடுப்பை அரசு வெளியிட்டது. இண்டஹ் கணகெடுப்பில் மத்திய பிரதேசத்தை பின்பற்றி மக்களின் மகிழ்வு குறித்து அமைக்கப்பட்ட மகிழ்ச்சி துறையின் மூலம் கேள்விகள் எழுப்பபப்ட்டன. மாநிலம் எங்கும் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டங்கள் நிஅக்ழ்த்தப்பட்டன.

இந்த கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் மூலம் ஆந்திர அரசு அதிகாரிகள் ஆந்திர மக்கள் 85% மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவதாக தெரிவித்தனார். அதாவது ஆந்திரா தனி நாடாக இருப்பின் அது உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் 7 ஆம் இடத்தை பிடித்திருக்கக் கூடும். இந்த இரு கணக்கெடுப்பு முடிவுகளையும் சந்திரபாபு நாயுடு தனது சமீபத்திய மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவி தேர்தல் பிரசாரங்கலில் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

சந்திரபாபு நாயுடு இந்த மகிழ்ச்சியான அந்திரா என்னும் வாசகம் தனது கட்சிக்கு பெரும் வெற்றியை அளிக்கும் என எண்ணினார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானா அன்று அவர் தோல்வியால் மகிழ்வின்மையை அடைந்துள்ளார். 85% மகிழ்ச்சியுள்ள மாநிலம் என அறிவித்த தெலுங்கு தேசத்துக்கு 39% வாக்குகள் மட்டுமே கிடைத்து ஆட்சியை இழந்துள்ளது.

இந்த தோல்வி குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நடத்திய ஆய்வுகளில் நாயுடுவின் ஆட்சிக்கும் பிரசாரத்துக்கும் உள்ள வேறுபாடுகள் பெருமளவில் உள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகரை உலகின் மூன்றாவது மகிழ்ச்சியான நகராக மாற்ற முதல்வர் நாயுடு கடந்த பிப்ரவரி மாதம் பல திட்டங்களை அறிவித்தார்.

ஆனால் வெறும் திட்டங்கள் மட்டுமே மகிழ்ச்சியை தராது என்பதற்கு இணங்க மாநிலத்தின் நிதி பற்றாக்குறையால் எந்த ஒரு திட்டமும் நிறைவேறவில்லை. இது குறித்து கவலைப்படாமல் தனது திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதே நேரத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு பல தரப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஏசி அறையில் இருந்து அறிவிப்புக்களை அளிப்பவரை விட தங்களை நேரில் சந்தித்து குறைகளை கெட்கும் தலைவரை மக்கள் விரும்ப தொடங்கினர். அத்துடன் சந்திரபாபு நாயுடு கம்மா சாதியை சேர்ந்தவர் என்பதால் அவருடைய கட்சியில் கம்மா சாதியினருக்கு பல பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அது மற்ற சாதியினருக்கு பெறும் அதிருப்தியை அளித்தது. இவைகளின் விளைவால் தெலுங்கு தேசம் ஆட்சியை இழந்துள்ளது.