கணவருடன் சென்ற இளம்பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டிய போலீசார்! புகார் பதிவு

Must read

சண்டிகர்:

ணவருடன்  இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டிய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று  இளஞ்ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணிச் சென்ற  இரு காவல்துறையினர், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை பார்த்து கண் சிமிட்டினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அருகில் உள்ள காவல்நிலையில், தனது கணவருடன் சென்று புகார் கூறினார். அதையடுத்து,  நாயகான் காவல்நிலைய போலீசார்  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 (சொல், சைகை அல்லது ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம்)  கீழ் அந்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய இளம்பெண்ணின் கணவர்.  போலீஸ் சீருடையில் இருந்த இரண்டு ஆண்கள் எனது மனைவியைப் பார்த்து கண் சிமிட்டியும், ஆபாசமான சைகைகளையும் செய்தார்கள். போலீஸ்காரர்களை எதிர்கொள்ளும் வகையில் நான் எனது பைக்கை நிறுத்தினேன், ஆனால் அவர்கள் உடனே அங்கிருந்து அகன்று விட்டனர். அவர்கள் சென்ற பைக்கின் பதிவு எண்ணை என்னால் கவனிக்க முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article