சென்னை:
மிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த மோக்கா புயல் அதிதீவிர புயலாக இன்று இரவு மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதிகளில் கடந்து எட்டாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கி அது படிப்படியாக வலுப்பெற்றது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

வரும் மே 13ம் தேதி அன்று மாலை இந்த புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நீ 14ஆம் தேதி காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி காக்ஸ் பஜார் மற்றும் கியாக்பியு இடையே அதிகபட்சமாக 120 முதல் 13 கிலோமீட்டர் இடையே 145 கிலோ மீட்டர் வேகத்தில் மே 14ஆம் தேதி முன் பகல் நேரத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.