புதுடெல்லி:

ஊழல் மற்றும் தவறான நடத்தை காரணமாக 12 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது.


ஊழல் மற்றும் துறை ரீதியாக தவறான நடத்தை காரணமாக இணை கமிஷனர் அந்தஸ்த்தில் இருந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப்பியுள்ளது.

இதில் ஐஆஸ்எஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவார். பெண் ஐஆர்எஸ் அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருவாயை மீறி சொத்து சேர்த்தது, தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டது போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான நடத்தை காரணமாக 12 வருமான வரித்துறை அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப்பியது.