சென்னை

மிழக அரசு சென்னையில் அமைத்துள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

தற்போது இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் வேகமாகப் பரவி வருகிறது.   இதில் ஒமிக்ரான் வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாகப் பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   இந்த உருமாறிய வைரஸ் தொற்றுக்களை மரபணு பகுப்பாய்வு மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தைத் திறந்து வைத்தார்.  இது இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசால் அமைக்கப்பட்ட மரபு பகுப்பாய்வு கூடம் ஆகும்.

தமிழக அரசு சென்னையில் அமைத்துள்ள இந்த மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.  இதன் மூலம் தமிழகத்திலேயே உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புக்களைக் கண்டறிந்து உடனுக்குடன் முடிவுகள் வெளியிடப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.